(மக்களை) நன்மையின் பக்கம்
அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும்
தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு
கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி
பெற்றோராவர்.3:104
ஈமான் கொண்டோரே!
இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்)
தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத்
தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130
எவர் (நரக)
நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில்
பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக
வெற்றியடைந்து விட்டார். 3:185
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக்
கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
எவர் அல்லாஹ்வுக்கும் அவன்
தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில்
பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா
ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள்
- இது மகத்தான வெற்றியாகும். 4:13
ஈமான் கொண்டோரே! மதுபானமும்,
சூதாட்டமும், கற்சிலைகளை
வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்
அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத்
விலகிக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:90
அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும்
விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது
மிகத் தெளிவான வெற்றியாகும்" 6:16
அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி;
அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம்
வெற்றியாளர்கள்.
7:8
எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம்
செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின்
பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால்
மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும்
ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்;
மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு
நன்மையே செய்யுங்கள். 22:77
உறவினர்களுக்கும்
ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை
கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை
நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்;
அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38
எவர் பயபக்தியுடன் நடந்து
கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ்
வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது
அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61
எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து
வந்தார்களோ
அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்;
அதுவே தெளிவான வெற்றியாகும். 45:30
(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு
விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத்
தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும்
பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து
கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்;
அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது)
உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள்
உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி
பெற்றவர்கள். 64:16
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
