|
இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு! யார் சொல்லி
இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறதா? என்று பார்த்து விளங்கி
ஏற்று நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன்,
ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.
இணைவைத்தல்
அன்றும், இன்றும் கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின்
சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு
பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. சபிக்கப்பட்டவைகள் (லஃனத்) இன்று பரகத்தாக மாறிவிட்டன.
உலமாக்கள்
முரண்பட்டால்....."கூடாது" என்கின்றனர் சிலர் "கூடும்"
என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா...
மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற கொஞ்சம்
அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே...
மண்
கேட்ட படலம் அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால்,
அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர்
ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது
அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்?
உண்மைக்கு
இத்ரீஸ் (அலை)
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் "மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக
"மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மலக்குல் மவ்த்,
இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்பித்தார்களாம்!"இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது.
குறுக்கு
வழியும், நேர் வழியும்
ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை
நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான
வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம்
சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.
விண்ணுலகப்
பயணம்
அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்!
அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின்
மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.
அறிஞர்களின் மதிமயக்கம்
இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின்
மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித
தலையீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை.
சத்தியத்தை மறைக்காதீர்!
இவ்வேதத்தில்
மக்களுக்காக நாம் தெழிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான
போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்;
சபிக்கக் கூடியவர்களும் சபிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 2:159)
போற்றுதலுக்குரியவர்கள் யார்
ஒரு ஆலிம்
தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்)
அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு" முஹ்யித்தீனே
கைப்பிடியுங்கள்"என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம்.
"உலகத்து மாந்தரின் ஈமானை
இன்னொரு
தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை
இன்னொரு தட்டிலும்
வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்"
என்ற நபி மொழி கூட
இவர்களுக்கு
தெரியாமல் போனது ஏன்?
சாத்தான் வேதம் ஓதுகிறது
நபி(ஸல்)
அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில்
இருந்த
அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக
கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது?
இஸ்லாத்தின் பெயரால் தீர்ப்புகள்
சில அறிஞர்கள் தங்கள் தீர்ப்புக்கு
ஆதாரமாக கடந்த காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலைத் குறிப்பிட்டு அதில் இப்படி உள்ளது என்று தீர்ப்பு
வழங்குகின்றர். சரியான தீர்ப்பை வழங்கி விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். எந்த நூலிலிருந்து
இந்த தீர்ப்பை பெற்றனரோ, அந்த நூலாசிரியர், குர்ஆனின் எந்த வசனத்தை, எந்த ஹதீஸை ஆதாராமாகக் கொண்டு
இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றாரோ அதனை மக்கள் முன்னே வைப்பதில்லை.
இறந்தவர்களுக்காக...!
இது உண்மையில்
இஸ்லாம்
அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை
இந்த
பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து
இது
மார்க்கதில் இல்லாத
ஒன்றும் ,பித்அத் என்றும் அறியலாம்.
இறையில்லங்களைப்
பாழாக்குவோர் அல்லாஹ்வின் பள்ளியில் எந்தச்
நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம், துதிக்கலாம். உலகம் முழுவதும்
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும்தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்கு தடை
விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா?
இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள்
ஹஜ்ஜுச் செய்யச் சென்றபோது, காஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது
ராபியாபஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்றுவிட்டதாகச் தெரிந்ததாம். இந்தக் கதை பல
வகைகளில் பலவிதமக சொல்லப்படுகின்றது. இந்த கதை சரியானது தானா! என்று நாம் ஆராய்வோம்!
ஷிர்க்கின் தோற்றம்
ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக்
கொள்கை உடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியார்களை அளவுக்கு
அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் "ஷிர்க்" (இணை
வைத்தல்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
ஈமானைப்
பாழாக்கும் செயல்கள்
அல்லாஹ்வின்
மகத்தான பண்புகளை அவனது படைப்புகளுக்கு கொடுத்து இயற்றப்பட்ட கவிகளுக்கு மார்க்க அறிவு குறைந்த பொதுமக்கள்
தான் பலியாகிறார்கள் என்றில்லை, கற்றறிந்த "மவ்லவிகளும்" இந்த ஷிர்க்கான கவிதைகளுக்கு துணைபோவதை நாம்
சர்வ சாதரணமாகக் காண்கிறோம்.
அசத்தியம்
அழிந்தே தீரும்
அல்குர்ஆனும்,
ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின்
மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை.
ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதா? சமீபகாலமாக முரீது கொடுப்போர் ரகசிய
ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
ஒளியிலிருந்து
நபி (ஸல்) அவர்களின் தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம்
போதவே இல்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு,
அவர்களின் அருங்குணங்கள், அல்லாஹ்வை தவிர எவருக்கும் அஞ்சாமை, அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்னற்ற
சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ்
அவர்களை வைத்திருக்கவில்லை.
மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடுதல்
நீங்கள்
சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது;
மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து
கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
குர்ஆன்,ஹதீஸ் பற்றி அப்துல் காதிர்
ஜீலானி (ரஹ்)
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம்
கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது
பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன.
இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப் பிரச்சாரமும்
செய்யப்படுகின்றது. |