காற்று வீசுகின்றபோது
![]()
யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228
![]()
இடி இடிக்கின்றபோது
![]()
அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992
![]()
மழை வேண்டி கேட்பது

யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!
![]()
யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! நூல்கள்: புகாரி 1/224 முஸ்லிம் 2/613
![]()
யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்கள் மற்றும் உன்னுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டுவாயாக! உன்னுடைய அருளை பெருகச் செய்வாயாக! அழிந்துவிட்ட உன்னுடைய ஊரை உயிர்பிக்கவும் செய்வாயாக! நூல்: அபூதாவூத் 1/305